Tamilசெய்திகள்

பெண்களை வலையில் விழ வைத்தது எப்படி? – போலீசிடம் திருநாவுக்கரசர் அளித்த வாக்கு மூலம்

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இவ்வழக்கில் கைதான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசிடம் 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கடந்த 15-ந்தேதி கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசை ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தினர். வழக்கில் வேறு யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதா? இதுவரை எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது

போலீசாரின் கிடுக்கிபிடி கேள்விகளுக்கு முதலில் திருநாவுக்கரசு மழுப்பலாக பதில் அளித்தார். எனினும்  சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2016-ம் ஆண்டு எம்.பி.ஏ. படித்தேன். எனக்கு கல்லூரியில் நிறைய மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. வட்டித்தொழில் மூலம் என்னிடம் பணம் புரண்டது. இதனால் நண்பர்கள், தோழிகளுக்கு ஆடம்பரமாக செலவு செய்தேன்.

இதனால் மாணவிகள் என்னை நம்பினர். அப்போது அவர்களின் செல்போன் எண்ணை வாங்கி, நண்பர் சபரிராஜனிடம் கொடுத்தேன். அவர் பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பெண்களை வலையில் வீழ்த்தி விடுவார். அவரிடம் மாட்டிக்கொண்ட பெண்களை காரில் சுற்றுலா செல்லலாம் என அழைப்பார்.

இதை நம்பி அவருடன் வரும் பெண்களை ஆள் இல்லாத இடத்துக்கு அழைத்து வந்து, அவர் பாலியல் சீண்டல் செய்வார். இதை சதீஷ், திருநாவுக்கரசு ஆகியோர் மறைந்திருந்து வீடியோ எடுப்பார்கள். பின்னர் அதை காட்டி பெண்களை மிரட்டினோம். சில பெண்களை அனுபவித்தோம். சிலரிடம் பணம், நகை பறித்தோம்.

இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் போலீசில் புகார் செய்தனர். அப்போது அரசியல் பிரமுகர் உதவியுடன் போலீஸ் விசாரணையில் இருந்து தப்பினோம். என்றாலும் கடந்த மாதம் ஒரு மாணவி எங்கள் மீது கொடுத்த புகார் விஸ்வரூபம் எடுத்ததால் போலீசில் சிக்கி கொண்டோம்.

தனிப்படை போலீசார் என்னை தேடுவதாக போலீஸ் ஒருவர் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. உடனே நான் ஆந்திராவுக்கு தப்பி சென்று திருப்பதியில் பதுங்கி இருந்தேன். பயத்திலும் பாதுகாப்புக்கும் சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். இதில், புகார் கொடுத்த பெண்ணை நான் பார்த்ததே கிடையாது, வழக்கில் என்னை சிக்க வைக்க சதி நடப்பதாக கூறி வழக்கை திசை திருப்ப நினைத்தேன். ஆனால் போலீசார் துப்பு துலக்கி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

திருநாவுக்கரசின் போலீஸ் காவல் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில், இன்று காலையிலேயே அவரை கோவையில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி நாகராஜன் முன்பு ஆஜர்படுத்தினர்.

திருநாவுக்கரசை நாளை (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *