X

பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை உயர்வு!

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது.

அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக சரக்கு லாரி கட்டணம் உயர்ந்தது. ஷேர் ஆட்டோ கட்டணமும் அதிகரித்தது.

தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி ரூ.72.99-க்கே விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் குறைந்து ரூ. 67.97 ஆக விற்பனை ஆகிறது.