X

பெங்களூரு நகரில் 6 ஆயிரம் கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி முடிவு

பெஙகளூரு நகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பழைமையான மற்றும் சிதிலம் அடைந்த கட்டிடங்களை தானாக இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதனால், பெங்களூரு நகரம் முழுவதும் சிதிலம் அடைந்துள்ள மற்றும் பழமையான கட்டிடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய முற்பட்டனர். அத்துடன், முறையாக அனுமதி பெற்றுள்ள கட்டிடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஏற்கனவே, 2019ம் ஆண்டில் அதிகாரிகள் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர், கொரோனா பரவல் காரணமாக மேற்கண்ட கட்டிடங்களை இடிக்கும் பணியை அதிகாரிகள் கை விட்டனர்.

இதை தொடர்ந்து கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால், பழைய மற்றும் சிதிலம் அடைந்த கட்டிடங்கள் தானாக இடிந்து விவ தொடங்கியது. இதனால் உஷாரான மாநகராட்சி அதிகாரிகள் பழைய மற்றும் சிதிலம் அடைந்த கட்டிடங்கள் மட்டும் இன்றி, அனுமதி பெறாத கட்டிடங்களை ஆய்வு செய்து கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி, பெங்களூரு நகரில் வரைப்படத்திற்காக அனுமதி இன்றி 6 ஆயிரம் கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

மாநகராட்சியின் அனுமதி இன்றி, வரைப்படத்திற்கான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 6 ஆயிரம் கட்டிடங்களுக்கான உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அத்துடன், வரைப்படம் இன்றி கட்டி இருப்பது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி மாநராட்சியின் அனுமதியின்றி பெரும்பாலான கட்டிடங்கள் கட்டி உள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். அக்டோபர் 8ம் தேதிக்கு பின் பெங்களூரு மாநகரில் வரைப்படத்திற்கான அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டி உள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அனுதியின்றி கட்டி உள்ள கட்டிடங்களை இடக்கவேண்டும் என்று கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.