கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள், ஸ்டாஃப்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் 500 மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 60 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 மாணவர்களில் இரண்டு பேருக்கு அறிகுறி இருந்தது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
60 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், அக்டோபர் 20-ந்தேதி வரை பள்ளியை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.