பூடான் மன்னர் இன்று ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்கிறார்

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சிறப்பாக வரவேற்றார். அதன்பின் இருவரும் டெல்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பூடான் மன்னருடன் ஜெய்சங்கர் பேசினார்.

இந்நிலையில், பூடான் மன்னர் வாங்சுக் இன்று டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பூடான் மன்னரின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான மற்றும் தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools