இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதனை புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.