X

புல்வாமாவில் தியாகிகளின் மனைவிகளின் தாலிகளை பறித்தவர்கள் யார்? – பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய டிம்பிள் யாதவ்

புல்வாமா வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மறுத்து, அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பறித்தது யார் என்று பிரதமர் மோடிக்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியின் ‘மங்கள்சூத்ரா’ கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:-

புல்வாமாவில் தியாகிகளின் மனைவிகளின் மங்களசூத்திரத்தை பறித்தவர்கள் யார் என்று மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும். வீரர்களுக்கு ஏன் விமானம் கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டும். கடந்த 10 வருடங்களாக நம்மை மறக்கடிக்க பல விசித்திரமான பிரச்சினைகளை கொண்டு வருகிறார்கள்.

இது அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் போராட்டம் என்பதால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் கவனமாகப் போராட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.