புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் முகமது ஷமி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி புரிந்தார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த அவர் தனது மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்.

முகமது ஷமியின் இந்த செயலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பாராட்டியுள்ளது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நிவாரணத்துக்கு நிதி உதவி மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி இருந்தார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news