புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு பில்ரோத் மருத்துவமனை முன்னெடுத்த நற்செயல்!

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பில்ரோத் மருத்துவமனை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டும் இன்றி அவர்களின் மேம்பட்ட வாழ்க்கைக்கான பல ஆக்கப்பூர்வமான விசயங்களை செய்வதோடு, மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மற்ற ஊழியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் பல்வேறு விசயங்களை செய்து வருகிறது.

அந்த வகையில், இம்மாதம் பிங்க் அக்டோபரை கருத்தில் கொண்டு, பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர டாக்டர்.ராஜேஷ் ஜெகநாதன் அவர்கள் புற்றுநோயில் இருந்து மீண்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்த நாளை, (அக்டோபர் 22) ஞாயிற்றுக்கிழமை சென்னை பி.வி.ஆர்- இன் அனைத்து திரைகளிலும், சமீபத்தில் வெளியான விஜயின் ‘லியோ’ படத்திற்கான 4500 டிக்கெட்களை வழங்கியுள்ளார். புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு மட்டும் இன்றி, மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள், பணியாளர்கள், அறை உதவியாளர்கள் என அனைத்து ஊழியர்களும் தங்கள் முழு குடும்பத்துடன் படம் பார்க்கும்படி உணவு கூப்பன்களுடன் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த சிறப்பு திரையிடல் நிகழ்வுக்கான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை சென்னை பில்ரோத் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில், மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் கலந்துக்கொண்டு மருத்துவர்கள் மற்றும் புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு ‘லியோ’ திரைப்பட டிக்கெட்டுகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர்.தீபா, “பில்ரோத் குடும்பமாகிய நாங்கள் கருணை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயத்தை நம்புகிறோம். இது எங்கள் அன்புக்குரிய நிர்வாக இயக்குநர் டி.ஆர்.ராஜேஷ் ஜெகநாதனின் முதன்மையான நோக்கம். பில்ரோத் கோட்டையை இன்றும் என்றென்றும் சிறப்பாக வைத்திருக்க இதுவே எங்களுக்கு உதவுகிறது. இப்படி தொடர்ந்து தனது ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும் அன்பு காட்டி வரும் எங்கள் நிர்வாக இயக்குநருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்றார்.

மேலும், புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான நோயல்ல, ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் போது  இலக்கு சிகிச்சை, மோனோக்ளோனல் ஆண்டிபாடிகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் இப்போது அதிகமான மக்கள் புற்றுநோயிலிருந்து குணமாகலாம், என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்தார்கள்.

பில்ரோத் மருத்துவமனை 30 வருடங்களுக்கும் மேலாக புற்றுநோயியல் துறையில் யோமன் சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தகது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools