X

புற்றுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை – நடிகர் விஜய் ஆண்டனி தொடங்கிய புதிய முயற்சி

விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி, திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஆண்டி பிகிலி கிட்டை வழங்கி, அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா, சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் பிச்சைக்காரர்களை அழைத்து படம் பார்க்க வைத்ததுடன், அவர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, விஜய் ஆண்டனி ஆதரவற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அசைவ உணவுகள் தன் கைகளினாலே பரிமாறி விருந்தளித்தார். இந்நிலையில், அடுத்ததாக இவர் புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளார்.

அதாவது, புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி தேவைப்படுவோர் (antibikiligsl@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ள ஜி.எஸ்.எல்.மருத்துவமனையுடன் சேர்ந்து இந்த புதிய முயற்சியை விஜய் ஆண்டனி தொடங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.