புரோ ஹாக்கி லீக் – புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடம்
9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
இந்நிலையில் இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டம் நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்தது. 2வது இடத்தில் ஜெர்மனியும், 3வதுஇடத்தில் நெதர்லாந்தும் உள்ளன. இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மீண்டும் ஜெர்மனியை எதிர்கொள்கிறது.