X

புரோ கபடி லீக் – பெங்களூரை வீழ்த்தி தமிழகம் வெற்றி

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக ஆடியது.

இறுதியில், தமிழ் தலைவாஸ் 42 – 24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

மற்றொரு போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை 51 – 30 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.