X

புரோ கபடி லீக் – புனே அணியை வீழ்த்தி மும்பை வெற்றி

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 7-வது புரோ கபடி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் நேற்றிரவு நடந்த 12-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் யு மும்பா அணியும், புனேரி பால்டன் அணியும் மோதின.

இதில், மும்பை அணி 33-23 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பால்டனை சாய்த்தது. இந்த தொடரில் மும்பை அணி பெற்றுள்ள 2-வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. இதில், பரபரப்பான கட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 27-25 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தியது.

Tags: sports news