10-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் 11-வது சுற்று ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளி), புனேரி பல்தான் (81 புள்ளி), தபாங் டெல்லி (69 புள்ளி), குஜராத் ஜெயன்ட்ஸ் (65 புள்ளி) ஆகிய 4 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
பெங்களூரு புல்ஸ், தமிழ் தலைவாஸ், யு மும்பா, உ.பி.யோதாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய 5 அணிகள் வாய்ப்பை இழந்தன. பிளே ஆப் சுற்றில் நுழைய எஞ்சிய 2 இடத்துக்கு பாட்னா பைரேட்ஸ் (63 புள்ளி), அரியானா ஸ்டீலர்ஸ் (60 புள்ளி), பெங்கால் வாரியர்ஸ் (54 புள்ளி) ஆகிய 3 அணிகள் போட்டியில் உள்ளன.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 119-வது ‘லீக்’ ஆட்டத்தில் பாட்னா-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 10 வெற்றி, 7 தோல்வி, 3 டையுடன் இருக்கும் பாட்னா அணி தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. பாட்னா அணி ஏற்கனவே 50-28 என்று கணக்கில் அந்த அணியை வீழ்த்தி இருந்தது. தெலுங்கு டைட்டன்ஸ் பதிலடி கொடுத்து 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
முதல் 2 இடங்களில் உள்ள ஜெய்ப்பூர், புனே அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளன.