Tamilவிளையாட்டு

புரோ கபடி லீக் – பாட்னா, டெல்லி, உ.பி யோதா அணிகள் பிளே ஆப் சுற்றில் இடம் பிடித்தது

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 22 ஆட்டம் இருக்கும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.

இன்றுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதுவரை 3 அணிகள் பிளே- ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

பாட்னா பைரேட்ஸ் 21 ஆட்டத்தில் 15 வெற்றி, ஒரு டை, 5 தோல்வியுடன் 81 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் அரியானாவுடன் மோதுகிறது.

தபாங் டெல்லி 11 வெற்றி, 4 டை, 6 தோல்வியுடன் 70 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சை இன்று எதிர்கொள்கிறது.

உ.பி.யோதா 22 ஆட்டத்தில் 10 வெற்றி, 3 டை, 9 தோல்வியுடன் 68 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.

எஞ்சிய 3 இடத்துக்கு பெங்களூர் புல்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், குஜராத் ஜெய்ன்ட்ஸ், மும்பை ஆகிய 6 அணிகள் போட்டியில் உள்ளன.

பெங்களூர் அணி 66 புள்ளியுடன் இருக்கிறது. அந்த அணிக்கு அனைத்து போட்டிகளும் முடிந்துவிட்டது. அரியானா 63 புள்ளியுடன் 5-வது இடத்திலும், ஜெய்ப்பூர் 62 புள்ளியுடன் 6-வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுக்கும் இன்னும் ஒரு ஆட்டம் உள்ளன.

புனே 60 புள்ளியுடன் 7-வது இடத்திலும், குஜராத் 57 புள்ளியுடன் 8-வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுக்கும் இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன. மும்பை 54 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது.

பெங்கால் 52 புள்ளி யுடனும், தமிழ் தலைவாஸ் 47 புள்ளியுடனும், தெலுங்கு டைட்டன்ஸ் 27 புள்ளியுடனும் முறையே 10 முதல் 12 இடங்களை பிடித்து வாய்ப்பை இழந்தன.

இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர்- புனே, குஜராத்- மும்பை, பாட்னா- அரியானா அணிகள் மோதுகின்றன.