Tamilவிளையாட்டு

புரோ கபடி லீக் – தமிழ் தலைவாஸ், புனே அணிகள் இன்று மோதல்

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் முதல்கட்ட ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்தது. தற்போது 2-வது கட்ட போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தபாங் டெல்லி அணி 41-21 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது.

டெல்லி அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்றது. அந்த அணி ஏற்கனவே 34-33 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சையும், 30-29 என்ற கணக்கில் தமிழ் தலைவாசையும் வீழ்த்தி இருந்தது. அரியானா அணி முதல் தோல்வியை தழுவியது.

மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் 30-26 என்ற கணக்கில் மும்பையை தோற்கடித்தது. பெங்களுரு அணிக்கு கிடைத்த 2-வது வெற்றியாகும். மும்பை 2-வது தோல்வியை தழுவியது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ்- பர்தீப் நர்வால் தலைமையிலான பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 39-26 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி இருந்தது. 2-வது போட்டியில் மயிரிழையில் வெற்றியை தவறவிட்டு ஒரு புள்ளியில் டெல்லியிடம் தோற்றது.

இன்றைய ஆட்டத்தில் பாட்னாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தமிழ் தலைவாஸ் உள்ளது. அந்த அணியில் ராகுல் சவுத்ரி, கேப்டன் அஜய் தாகூர், சபீர் பாபு, மஞ்சித் சில்லார் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

பாட்னா அணியும் 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடம் தோற்றது. 2-வது போட்டியில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி இருந்தது.

இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- புனே அணிகள் மோதுகின்றன.

பெங்கால் அணி 2-வது வெற்றி ஆர்வத்திலும், புனே அணி முதல் வெற்றி வேட் கையிலும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *