புரோ கபடி லீக் – டெல்லியை வீழ்த்தி அரியானா வெற்றி
புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி, அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே அரியானா அணி அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தது. முதல் பாதி முடிவில் அரியானா 21 -13 என முன்னிலை வகித்தது. தொடர்ந்து, இரண்டாவது பாதியிலும் அரியானா அணியின் கை ஓங்கியது.
இறுதியில், அரியானா அணி 47 – 25 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் அரியானா அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது.
மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் 25 -25 என ஆட்டம் சமனில் முடிந்தது.