X

புரோ கபடி லீக் – குஜராத்தை வீழ்த்தி மும்பை வெற்றி

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் யு மும்பை அணியும், குஜராத் பார்சுன் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 17 – 14 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணி முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் மும்பை அணிக்கு குஜராத் அணி வீரர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.

இறுதியில், பரபரப்பான கட்டத்தில் மும்பை அணி 36 – 26 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றி மூலம் மும்பை அணி பதிமூன்றாவது வெற்றியை பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.