X

புரோ கபடி லீக் – அரியானா அணியை வீழ்த்திய உ.பி யாதவ்

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உபி யோதா அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆனாலும், தொடர்ந்து யுபி யோதா அணி சில புள்ளிகளில் முன்னிலை வகித்து வந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் சளைக்காமல் போராடினர். ஒரு கட்டத்தில் ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போது இரு அணிகளும் சமனிலை வகித்தன. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில், அரியானா அணியை 30 – 29 என்ற கணக்கில் உபி யோதா அணி வீழ்த்தி நான்காவது வெற்றியை பதிவுசெய்தது.

நேற்றைய ஆட்டத்தில் அரியானா அணி கடைசி நிமிடத்தில் பாய்ண்ட் எடுத்து பெங்கால் அணியை வீழ்த்தியது நினைவிருக்கலாம்.