Tamilவிளையாட்டு

புரோக கபடி லீக் – இன்று தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதல்

புரோ கபடி ‘லீக்’ போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 6 தோல்வி, 2 டையுடன் 35 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது. பாட்னாவை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அணியை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் ஆடும். இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி-உபி. யோதா மோதுகின்றன. இரு அணிகளும் 7-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன.