இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 420 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பனிலிருந்து 420 கி.மீ., குமரியிலிருந்து 600 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.
புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
12 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுவடையும். இன்று மாலை அல்லது இரவில் திரிகோணமலை அருகே புரெவி புயல் கரையை கடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.