X

புரூக்ளின் மெட்ரோ ரெயில் சுங்கப்பாதையில் துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது

அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் நேற்று முன்தினம் பயங்கர துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என 10 பேரும், சம்பவத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் வரை காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதம்
ஏற்படவில்லை. எனினும், துப்பாக்கிச்சூடு யார் நடத்தியது என்ற விவரம் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், புரூக்ளின் மெட்ரோ சுரங்க பாதையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நடத்திய பிராங்க் ஜேம்ஸ் (62), என்ற நபர் கைது செய்யப்பட்டு உள்ளார் என நியூயார்க் போலீஸ் கமிஷனர்
தெரிவித்துள்ளார்.