Tamilசெய்திகள்

புயல் மீட்பு பணிகளுக்கான நிதியை வங்கி கணக்கு மூலம் அனுப்பலாம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ‘மிச்சாங்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்திடவும், புதிய வாழ்வாதாரங்களை மீள உருவாக்கிடவும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் முதலமைச்சர் பொது நிவாரண நிதி வாயிலாக, மிச்சாங் மீட்புப் பணிகளுக்குத் தங்களின் பங்களிப்பை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

(1) வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை, பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி பற்றுச் சீட்டினைப் (Receipt) பெற்றுக்கொள்ளலாம். https://cmprf.tn.gov.in

(2) Electronic Clearing System (ECS) / RTGS / NEFT மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம். வங்கி பெயர் -இந்தியன் ஓவர்சீஸ வங்கி கிளை-தலைமைச் செயலகம், சென்னை-600009

(3) UPI-VPA ID: tncmprf@iob மற்றும் PhonePe, Google Pay, PayTM, Amazon Pay, Mobikwik போன்ற பல்வேறு செயலிகள்.

(4) மேற்கண்ட ECS மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச்சீட்டினைப் பெற ஏதுவாக கீழ்க்கண்ட தகவல்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை, செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண், தங்களது முழுமையான முகவரி, இ-மெயில் விவரம், தொலைபேசி, அலைபேசி எண்.

(5) நிவாரண நிதி வழங்கும் வெளிநாடுவாழ் மக்கள் கீழ்க்கண்ட SWIFT Code-ஐப் பின்பற்றிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. IOBAINBB001 Indian Overseas Bank, Central Office, Chennai.

(6) மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்குக் கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, “முதலமைச்சரின் பொது நிவாரண நிதி (Minister’s Public Relief Fund)” என்ற பெயரில், கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:-

அரசு இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,

முதலமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா. மின்னஞ்சல் முகவரி jscmprf@tn.gov.in

மேற்கூறிய முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் தவிர, நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility)-ன் கீழ் பேரிடர் நிவாரணத்திற்காக நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள், மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைப்பின் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.

வங்கி பெயர் -இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னை-600 009 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.