Tamilவிளையாட்டு

பும்ரா ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்துவிடாது – ஆகாஷ் சோப்ரா கருத்து

ஜஸ்பிரித் பும்ரா நாட்டிற்காக விளையாடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுமையாகத் தகுதி பெற வேண்டுமானால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்தியன் பிரீமியர் லீக்கில் சில ஆட்டங்களைத் தவறவிட வேண்டும் என்று முன்னாள் இந்திய பேட்டர் ஆகாஷ் சோப்ரா கருதுகிறார்.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா கடந்த செப்டம்பரில் இருந்து வெளியேறினார் மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையை தவறவிட்டார். பங்களாதேஷ், நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் இருந்து இந்தியாவுக்காக விளையாடவில்லை.

இந்நிலையில் பும்ரா ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்துவிடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நீங்கள் முதலில் இந்திய வீரர். பிறகு உங்கள் பிரான்சைஸிற்கு (franchise) விளையாடுங்கள். எனவே, பும்ரா ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால் பிசிசிஐ தலையிட்டு அவரை விடுவிக்க மாட்டோம் என்று உரிமையாளரிடம் தெரிவிக்கும். அவர் ஜோஃப்ரா ஆர்ச்சருடன் ஏழு ஆட்டங்களில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்து விடாது. அதே நேரத்தில், நீங்கள் உடற்தகுதியுடன் இருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். அது உங்களை ஆரோக்யத்துடன் வைத்திருக்கும்.

இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.