Tamilசெய்திகள்

புத்தாண்டு புதிய தொடக்கங்களுக்கு வித்திடட்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உகாதி – புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

புத்தாண்டு புதிய தொடக்கங்களுக்கு வித்திடட்டும்! தென்னகத்தின் உரிமைகள் மீட்கப்பட்டு நமக்குரிய வரிப்பகிர்வைப் பெறும் ஆண்டாக அமையட்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.