Tamilசெய்திகள்

புதுவையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது!

புதுவையில் கொரோனா பரவலை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி முதல் மூடப்பட்டன. தற்போது அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று பரவல் குறைந்துள்ளது.

இதைத்தொடர்ந்து பள்ளிகளை திறக்க புதுவை அரசு முடிவு செய்தது. இதன்படி நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து பள்ளிகளில் வகுப்பறைகளை சுத்தம் செய்வது, மேஜைகளை ஒழுங்குபடுத்துவது, இடைவெளி விட்டு மாணவர்களை அமர வைப்பது உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுடன் ஆலோசித்த பின்னர் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

* பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் சூழல் வரும்போது மீண்டும் திறக்கப்படும்.

* புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள், பெற்றோர், அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.