புதுமனை புகுவிழாவுக்கு தயாராக இருந்த அடுக்குமாடி வீடு சரிந்து விழுந்து விபத்து
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குப்பட்ட உப்பனாரு வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்ட 3 அடுக்குமாடி வீடு சரிந்து துண்டாக விழுந்து விபத்துக்குள்ளானது.
உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு சரிந்து விழுந்துள்ளது. இந்த வீடு புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில் சரிந்து விழுந்தது. வரும் பிப்ரவரி 1ம் தேதி வீட்டின் கிரக பிரவேசம் நடைபெற இருந்தது.
வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.