தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்று வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தார். இறுதியாக சூர்யாவை வைத்து என்.ஜி.கே. என்ற படத்தை இயக்கினார்.
சமீபத்தில் செல்வராகவன் அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டதாகவும், படத்துக்கான கதையை எழுத தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டார். இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும் செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகத்தை இயக்க இருப்பதாக செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதில் தனுஷுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.