X

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்

புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி கடந்த மே மாதம் 9-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். சிகிச்சை முடிந்து மே மாதம் 17-ம் தேதி வீடு திரும்பினார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகு நேற்று அவர் (கோவிஷீல்ட்) கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

சுகாதாரத் துறை ஏற்பாட்டின் பேரில் இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு தலைமையிலான சுகாதார குழுவினர் முதல் மந்திரி ரங்கசாமி  வீட்டிற்கு சென்று தடுப்பூசி செலுத்தினர்.

முன்னதாக, சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் அருண் முதல் மந்திரியின் வீட்டிற்கு வந்தார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு அரை மணி நேரம் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.