Tamilவிளையாட்டு

புதுச்சேரி கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கும் திட்டம் நீட்டிப்பு

 

கைதிகளுக்காக சிறைச்சாலையிலிருந்து பெருமை மிக்க வாழ்வுக்கு என்ற திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் 8 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 15 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு கூடைப்பந்து, பேட்மின்ட்டன், கைப்பந்து, சதுரங்கம், டேபிள் டென்னிஸ், கேரம்
உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்த திட்டத்தின் மூன்றாவது கட்ட நடவடிக்கைகளை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் வைத்யா டெல்லியில் இருந்து இணைய வழியில் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி மத்திய சிறையில், சிறைத் துறை தலைவர் ரவிதீப் சிங், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் 500 கைதிகளுக்கான விளையாட்டு பயிற்சி முகாம்கள்
தொடங்கப்பட்டன.

விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்க உதவுவதுடன், அதற்கான உபகரணங்களையும் சாதனங்களையும் இந்தியன்ஆயில் நிறுவனம் வழங்குகிறது.

விளையாட்டு பயிற்சிகள் சிறைக் கைதிகளுக்கு, விடுதலைக்குப் பிறகு தாழ்வு மனப்பான்மையின்றி சுமூகமாக வாழ உறுதுணை புரியும் என்று நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய ஸ்ரீகாந்த் வைத்யா
தெரிவித்தார்.