புதுச்சேரியில் 45 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது – கவர்னர் தகவல்
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதுச்சேரியில் 45% மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரானா மூன்றாவது அலை வரக்கூடாது. உயிரிழப்பு ஏற்பட கூடாது என வேண்டி கொண்டேன். 3வது அலை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். கொரோனா நோய் தொற்றில் முக கவசம் போட பழகுவதுபோல், ஹெல்மெட் அணிவதும் பழகிக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய காத்து கொண்டு இருந்தேன். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் முகக்கவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.