புதிய வைரஸால் தமிழகத்தில் பெரிய பாதிப்புகள் இல்லை – அமைச்சர் ம.சுப்பிரமணியன் பேட்டி

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, புதிய வைரஸ் தொற்று கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பரவி வருவதாகவும், கேரளாவில் 230 பேர் இது வரை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இது தொடர்பக தமிழ்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கேரளா அதிகாரிகள் தெரிவித்தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பெரிய அளிவில் பாதிப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் காய்ச்சல் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசியார் சோதனை அதிகப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பல்வேறு விதமான உருமாற்றங்களை பெற்று வருகிறது. தற்போது இருப்பது எந்த மாதிரியான உருமாற்றம் என்பதை குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கான முடிவுகள் ஒரு வாரத்தில் தெரியவரும் என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news