X

புதிய புகைப்படங்களை வெளியிட்ட சன்னி லியோன்

ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தற்போது நடிகர் சதீஷுடன் இணைந்து ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளத் தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சரியான சூரிய அஸ்தமனம்!! என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.