புதிய சொகுசு கார் வாங்கிய நடிகை விஜய்! – விலை எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் தற்போது தி கோட் (தி கிடேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தி கோட் படத்திற்கான பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் டிரைலர் அப்டேட்டுக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், நடிகர் விஜயின் புதிய ஆடம்பர சொகுசு கார் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது தொடர்பான வீடியோவில் ஆடம்பர சொகுசு கார் மாடல் விஜயின் வீட்டில் இருந்து வெளியே வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விஜய் பயன்படுத்தி வரும் வாகனங்கள் பட்டியலில் இந்த காரும் தற்போது இணைந்து இருப்பதாக சமூக வலைத்தள பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் வீடியோவில் இடம்பெற்று இருக்கும் கார் லெக்சஸ் LM சீரிஸ் மாடல் ஆகும். இந்திய சந்தையில் இந்த காரின் விலை ரூ. 2 கோடி (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது. எம்பிவி ரக கார் என்ற வகையில், இந்த கார் ஏராளமான ஆடம்பர வசதிகளை கொண்டிருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools