Tamilவிளையாட்டு

புதிய சாதனை படைத்த விராட் கோலி

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதலில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று 1-0 எனும் கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், சர்வதேச அளவிலான கிரிக்கெட்டின் ஒவ்வொரு பிரிவிலும் விராட் கோலி 50 வெற்றிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரும் 26-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.