புதிய சாதனை படைத்த ரஜினியின் ‘தர்பார்’ பாடல்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2020ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக இந்த படம் திரைக்கு வரவுள்ளது.

தர்பார் படத்தில் ‘சும்மா கிழி’ என்று எஸ்.பி.பி பாடிய முதல் பாடல் நேற்று முன் தினம் யூடியூப்பில் வெளியானது. சில காலங்களுக்கு முன்பு வந்த ரஜினி படங்களில் வரும் முதல் பாடலை போல ‘சும்மா கிழி’ பாடல் இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1 மணிநேரத்தில் 10 லட்சம் பார்வைகளை கடந்தது. தற்போது தமிழ்த் திரையுலகில் 24 மணிநேரத்தில் அதிக பார்வைகளைக் கடந்த பாடலின் லிரிக்கல் வீடியோ என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 24 மணிநேரத்தில் 80 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

இது தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “இது தலைவரின் அன்பு சாம்ராஜ்ஜியம். 24 மணிநேரத்தில் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்து, அதிகம் பேர் பார்த்த தமிழ்ப் பாடல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். இன்று காலை வரை ஒரு கோடியே 18 லட்சம் பார்வைகளை பெற்று சாதனை புரிந்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools