X

புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்!

இந்திய ரூபாய் நோட்டுகளில், கள்ள நோட்டுகளை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ரூபாய் நோட்டுகளின் வண்ணம், வடிவமைப்பு, எடை போன்றவற்றில் அதிரடியாக மாற்றம் செய்து பல வண்ணங்களில் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ. 2000 நோட்டுகளை வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து 1 ரூபாய் நோட்டுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வடிவமைப்புடன் கூடிய புதிய வண்ணங்களில் புழக்கத்தில் விட உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நோட்டு 9.7 சென்டி மீட்டர் நீளம் மற்றும் 6.3 சென்டி மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். செவ்வக வடிவில் 100 சதவீதம் பருத்தி காகிதத்துடன், 110 மைக்ரான் தடிமன் கொண்டதாக இருக்கும்.

அசோகத்தூணுடன் மையத்தில் மறைவாக ‘1’ குறிக்கப்பட்டிருக்கும். வலது புறத்தில் செங்குத்தாக அமைக்கப்பட்ட பாரத் என்ற சொற்கள், தலைகீழாக ஒரு ரூபாய் 2020-ம் ஆண்டுடன் ‘இந்திய அரசு’ என்ற சொற்களும் இடம் பெற்றிருக்கும்.

நாட்டின் விவசாய ஆதிக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் தானியங்களின் வடிவமைப்பு மற்றும் சாகர் சாம்ராட் எண்ணைய் ஆய்வு தளம் இடம் பெற்றிருக்கும்.

நோட்டின் நிறம் இளஞ்சிவப்பு பஞ்சை நிறம் கலந்ததாக இருக்கும். 15 இந்திய மொழிகளும் இடம் பெற்றிருக்கும். நோட்டின் எதிரெதிர் பக்கத்தில் ‘இந்திய அரசு’ என்ற சொற்களுக்கும், நிதி அமைச்சரின் செயலாளர் ஸ்ரீசுதானு சக்ரவர்த்தியின் இருமொழி கையொப்பமும் இடம் பெற்றிருக்கும்.

இடமிருந்து வலமாக எண்களின் ஏறுவரிசையிலும், வலது புறத்தின் கீழ் எண் கருப்பு நிறத்தில் இருக்கும். அதே நேரத்தில் முதல் மூன்று எழுத்துகள் அளவு மாறாமல் இருக்கும். இந்த புதிய நோட்டு விரைவில் புழக்கத்திற்கு வர உள்ளது.