புஜாரா, ரகானேவுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடக்க்கும் – ரோகித் சர்மா
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒரு டெஸ்ட் அணியாக தற்போது நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். அதற்குரிய எல்லா பெருமையும் விராட் கோலியையே சாரும்.
அவர் விட்டு சென்ற இடத்தில் இருந்து அணியை முன்னெடுத்து செல்வேன். ரகானே, புஜாரா ஆகியோரது இடத்தை நிரப்புவது எளிதல்ல. இந்திய அணிக்காக அவர்கள் அளித்த பங்களிப்பை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. வெளிநாட்டில் பெற்ற வெற்றிகள், டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது எல்லாவற்றிலும் அவர்கள் முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளனர்.
இப்போது அவர்கள் பெயர் அணித்தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை அவ்வளவு தான். மற்றபடி அவர்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இத்துடன் முடிந்து போய் விடவில்லை. எங்களது வருங்கால அணித்திட்டத்தில் நிச்சயம் அவர்கள் இருப்பார்கள்’ என்றார்.