புச்சா நகர் தாக்குதல் – நேரலையில் கண்ணீர் விட்டு அழுத செய்தி வாசிப்பாளர்

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கியது. அந்தப் போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகவும், குடிமக்கள் பலர் கொல்லப்படுவதாகவும் செய்தி வெளியானது.

இதற்கிடையே, உக்ரைனில் உள்ள புச்சா பகுதியின் மீது தாக்குதல் நடத்திய வீரர்களை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டி, கவுரவப்படுத்தினார். இதுதொடர்பான செய்தி ஜப்பானைச் சேர்ந்த
ஒரு செய்தி நிறுவனத்தில் ஒளிபரப்பானது.

இந்நிலையில், புச்சா படுகொலை குறித்த செய்தியை வாசித்த செய்தி வாசிப்பாளர் யூமிகோ மட்சுவோ, நேரலையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். சில நொடிகளில் சகஜ நிலைக்கு வந்த அவர்,
அதன்பின் செய்தி வாசிப்பை தொடர்ந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools