Tamilசினிமா

பீஸ்ட் படத்தை வெளியிட்ட திரையரங்கின் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்திய ரசிகர்கள்

மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை
சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இந்தப் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பீஸ்ட் படத்தின் டிரைலரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்தது. பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் சில
திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்ட பொழுது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கைகள் மேல் ஏறி அவர்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். அப்போது தியேட்டர்களில் இருக்கைகளை
ரசிகர்கள் சிலர் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.