விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், விரைவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு டெல்லியில் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெற இருக்கும் படப்பிடிப்பில் சதீஷ் கிருஷ்ணன் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.