Tamilசினிமா

’பீஸ்ட்’ படத்தின் கதை வெளியானது

பீஸ்ட்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வருகிற 13ஆம் தேதி வெளியாகிறது. நேற்று இப்படத்தின் இந்தி டிரைலர் வெளியானது. இந்தி டிரைலரை பகிர்ந்த நடிகர் வருண் தவான், பீஸ்ட் இந்தி டிரைலரை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். எப்பொழுதும் நான் விஜய் சாரின் பெரிய ரசிகன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கேலக்ஸி திரையரங்கம் பீஸ்ட் படக் கதையை பகிர்ந்துள்ளது. அதில் நகரின் பரபரப்பான பகுதியை சர்வதேச பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். பயங்கரவாத அமைப்பின் தலைவரை விடுவிக்கக்கோரி இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். பயங்கரவாதிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்பிரிவின் தலைவருக்கு, பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட பகுதியில் ரா உளவு அமைப்பின் முன்னாள அதிகாரி இருப்பது தெரியவருகிறது. இதனையடுத்து பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்க, அவரது உதவியை நாடுகின்றனர்.

அந்த முன்னாள் அதிகாரி பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்படத் தொடங்குகிறார். அதன் ஒரு பகுதியாக பயங்கரவாத அமைப்பின் தலைவரை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது. இந்த நிலையில் முன்னால் உளவு அதிகாரி புத்திசாலி தனமாக செய்லபட்டு பயங்கரவாதிகளிடமிருந்து சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு, பயங்கரவாதிகளை ஒழித்துகட்டுகிறார் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.