Tamilசெய்திகள்

பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்யும் ஆப்கானின் முன்னாள் மந்திரி

சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே தந்துகொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னொரு வித்தியாச செய்தி. வெளிநாட்டுக்குத் தப்பியோடிய ஜனாதிபதி அஷ்ரப் கனி அரசில் மந்திரியாக பதவி வகித்த சையத் அகமது ஷா சதாத், தற்போது ஜெர்மனி நகரம் ஒன்றில் பீட்சா டெலிவரி நபராக வேலை பார்க்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு அஷ்ரப் கனி மந்திரிசபையில் சதாத் இணைந்தார். தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மந்திரியாக பதவி வகித்த அவர், பின்னர் அப்பொறுப்பில் இருந்து விலகினார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஜெர்மனியின் லீப்சிக் நகருக்கு இடம் பெயர்ந்த சதாத், தற்போது அங்கு பீட்சா டெலிவரி நபராக பணியாற்றுகிறார். பீட்சா டெலிவரி பையுடன் அவர் சைக்கிள் ஓட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கவனம் பெற்றிருக்கின்றன.

ஆனால் முன்னாள் ஆப்கான் மந்திரி சையத் அகமது ஷா சதாத் அலட்டிக்கொள்ளாமல், ஆசிய, அரபு நாடுகளில் உயர் அந்தஸ்து வகிக்கும் நபர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள தனது வாழ்க்கை உந்துதலாக இருக்கும் என்று கூறுகிறார்.