X

பீகார் ரெயில் விபத்தில் 4 பேர் பலி – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இரங்கல்

டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர்.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பீகார் ரெயில் விபத்து குறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளத்தில், ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். பக்சர் மாவட்டத்தில் ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் முடிந்தபின் தண்டவாளம் சீரமைக்கும் பணி தொடங்கும் என பதிவிட்டுள்ளார்.

Tags: tamil news