பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் தமிழக வருகை திடீர் ரத்து
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தில் கருணாநிதியின் பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் கோட்டத்தை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் திறந்து வைக்க இருந்தார்.
இந்நிலையில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீர் ரத்தாகி உள்ளது. பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. திடீர் உடல்நலக்குறைவால் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் பங்கேற்க உள்ளார். முதல் மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்காத நிலையில், பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் கலைஞர் கோட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை புறப்பட்டு உள்ளார்.