Tamilசெய்திகள்

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவு – தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. இவற்றில் ஆட்சி அமைப்பதற்கு 122 உறுப்பினர்கள் தேவையாக உள்ளது.

பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க. இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணியும் போட்டியிட்டன.

பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது.

இந்நிலையில், பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி 122 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 122 (பா.ஜ.க. -72, ஜே.டி.யு. -42, வி.ஐ.பி. – 4, ஹெச்.ஏ.எம். – 4)