பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் மழையால் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அங்கு வசித்த பல்லாயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது என மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்டு வருகின்றனர்.