Tamilவிளையாட்டு

பி.எஸ்.ஜி கிளப்பில் இருந்து விளகும் லயோனல் மெஸ்சி?

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி, பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக விளையாடி வருகிறார். அவர் அண்மையில் சவுதிஅரேபியா சுற்றுலா துறையுடன் செய்து கொண்ட ஒப்பந்தபடி அங்கு 2 நாள் பயணம் மேற்கொண்டார்.

ஆனால் அவர் கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளிநாடு சென்றது சர்ச்சையானது. இதையடுத்து ஒழுங்கீன நடவடிக்கையாக அவருக்கு லீக்1 போட்டியில் விளையாட 2 வாரங்கள் பி.எஸ்.ஜி. நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த 2 வாரத்துக்கும் அவருக்கு சம்பளம் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்துள்ள மெஸ்சி, இந்த சீசனுடன் பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.