மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எண்ணமாகும். ராஜ்ய சபையில் முத்தலாக் சட்டம் கொண்டுவரப்படும். ஆனால் ஒரு தரப்பு பெண்கள் உரிமை பெற கூடாது. தொடர்ந்து அந்த துயரத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சிந்தனை கொண்டதால் தான் எதிர்க்கிறார்கள். புதுச்சேரி மாநில கவர்னர் மக்களுடைய பிரச்சினைகளை நேரிடையாக சென்று செய்ய வேண்டிய உதவிகள் செய்து வருகின்றார். மாநில அரசு, மக்கள் பிரதிநிதிகள் உரிமைகளை பறிக்காமல் சட்டத்துக்குட்பட்டு தனது அதிகாரத்தில் மக்கள் செய்து வருகிறார். இதில் எந்த தவறும் இல்லை.
புதுச்சேரி அரசு கையாலாகாத அரசாக உள்ளது. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்த கூடியது. நீர்நிலை, விவசாயம் ஆகியவற்றுக்கு பாதிப்பு தரக்கூடியது. அதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தும் தடுக்க முடியாததால் தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. பிளாஸ்டிக் தடையை எதிர்த்து போராட்டம் நடத்துவது தேவையற்றது. இதை புரிந்துகொண்டு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.