பிளஸ் 2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது. இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இதில் மாணவர்கள் 7801 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 89.34 சதவீதம் ஆகும். தேர்வு எழுதிய மாணவிகளில் 9,538 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 94.04 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,

பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்! இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்! என்று தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools